உலக செயற்கை குழாய் முறை சிகிச்சை தினம் இன்று!

உலக செயற்கை குழாய் முறை சிகிச்சை தினம் நாடு முழுவதும் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதன் நோக்கம் மற்றும் இந்த தினம் ஏன் அனுசரிக்கப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

உலக செயற்கை குழாய் முறை சிகிச்சை தினம் இன்று!

மனித மூளைதான் இந்த உலகிலேயே மிகவும் துல்லியமான மற்றும் சிறப்பான ஒன்று என பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அது மட்டுமின்றி, மனித உடலே மிகவும் அரிதான மற்றும் பல பிரம்மிப்புகள் நிரைந்த ஒன்று எனவும் விஞ்ஞானிகளே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அப்படிப்பட்ட மனித உடலில் பல வகையான மாற்றங்களையும், உள்ள குறைபாடுகளை சரி செய்யும் பல வழிமுறைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். அண்த வகையில், மனிதம் வளரத் தேவையான ஒன்றான கருத்டரித்தலில் பல வகையான ஆராய்ச்சிகளும் சோதனைகளும் நடத்தி வரும் நிலையில், பல ஆண்டுகளாக வெற்றிப் பெற்ற ஒரு முறையாக இருப்பது செயற்கை குழாய் முறை சிகிச்சை, அதாவது Test Tube Baby. இந்த வழிமுறையால், பல குடும்பங்களுக்கு வாரிசு வந்திருக்கிறது. இதனை அங்கிகரிக்கும் வகையில், இன்று உலக செயற்கை குழாய் முறை சிகிச்சை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வரும் இண்த தினம், இயற்கையாகவே குழந்தையை பெற்றெடுப்பது  என்பது இன்றைய தலைமுறையினரிடம் குறைந்து வருகிறது என்பதை நினைவுபடுத்தவும், அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கடைபிடிக்கப்படுகிறது.

மன அழுத்தம், கணவன் மனைவியிடையே புரிதல் இல்லாதது, திருமணமான சில மாதங்களிலேயே  குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் போன்ற காரணங்களால் செயற்கை குழாய் சிகிச்சை முறையில் குழந்தை கருத்தரிப்பது 50 முதல் 60 விழுக்காடு அதிகரித்து விட்டதாக குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மன அழுத்தம், உடல் பருமன் கணவன் மனைவியிடையே இருக்க வேண்டிய புரிதல் குறைந்திருப்பது போன்ற காரணங்களால் இயற்கை முறையிலான கருத்தரிப்பு குறைந்து, செயற்கை முறையிலான கருத்தரிப்பை இன்றைய தலைமுறை எதிர்நோக்கி இருப்பதை அண்மைக்காலமாக அதிகரித்திருக்கும் செயற்கை குழந்தை கருத்தரிப்பு மையங்களை வைத்து பார்க்க முடிவதாக குழந்தை சிகிச்சை இன்மை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

Test Tube Baby Center in Delhi | ID: 12187099648What Is Test Tube Baby? - MOM News Daily
 
கடந்த பத்து ஆண்டுகளில் இயற்கை முறையில் கருத்தரிப்பது குறைந்து இருப்பதாகவும், செயற்கை முறையில் கருத்தரிப்பது 50 முதல் 60 விழுக்காடு வரை உயர்ந்திருப்பதாகவும் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து குழந்தையின்மை சிறப்பு சிகிச்சை நிபுணர் நான்சி அனிதா, “இன்றைய இளம் தலைமுறையினரிடையே இயற்கையாகவே கருத்தரித்தறிப்பதற்கு போதிய கால அவகாசத்தை கொடுக்க மறுப்பதாகவும், திருமணமான உடனே கருத்தரித்து விட வேண்டும் என்று நினைப்பதால் பெரும்பாலான இளம் தம்பதியினர் அதிக அளவில் செயற்கை கருத்தரித்தல் முறைக்கு வருவதை பார்க்க முடிவதாக குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.” எனக் கூறினார்.

Next-Gen Test Tube Baby Born | The Scientist Magazine®

மேலும் பேசிய அவர், இன்றைய பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப கணவன் மனைவி இருவரும் பணிக்கு சென்று விடுவதால் இருவருக்கும் இடையே புரிதல் என்பது குறைந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் உணவு பழக்க வழக்கங்கள், அன்றாட வாழ்வியல் முறை, மன அழுத்தமான பணிச்சுமை காரணமாக இயற்கை கருத்தரித்தல் என்பது குறைவுக்கு மிக முக்கிய காரணங்களாக மருத்துவ உலகில் சொல்லப்படுகிறது. திருமண வயதை கடந்து திருமணம் செய்வதும் இயற்கைய கருத்தரித்தல் குறைய மற்றொரு காரணமாக சொல்லப்படுகிறது எனக் கூறினார்.
 

இந்நாள் என்பது செயற்கை கருத்தரித்தல் என்ற முறையை மறக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தவே என்கிறது மருத்துவ உலகம்.