யார் ஷின்சோ அபே ?

யார் ஷின்சோ அபே ?

ஷின்சோ அபே இரண்டு முறை ஜப்பானின் பிரதமராக இருந்தவர் (2006-07 மற்றும் 2012-20).  அவர் முக்கிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாத்தா கிஷி நோபுசுகே 1957 முதல் 1960 வரை ஜப்பானின் பிரதமராக பணியாற்றியவர். மேலும், அவரது மாமா சாடோ ஐசாகு 1964 முதல் 1972 வரை அதே பதவியில் இருந்தவர்.

அவர் டோக்கியோவில் உள்ள சேய்க்கி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் (1977).  பின்னர் அவர் அமெரிக்காவிற்குச் சென்று அங்கு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்றார்.

1980 களின் முற்பகுதியில், அபே லிபரல்-டெமாக்ரடிக் கட்சியில்  தீவிரமாக செயல்பட்டார். மேலும் 1982 இல் அவர் ஜப்பானின் வெளியுறவு அமைச்சராக இருந்த தனது தந்தை அபே ஷிண்டாரோவின் செயலாளராக பணியாற்றினார்.

அபே இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிறந்த ஜப்பானின் முதல் பிரதம மந்திரி மற்றும் ஜப்பானின் இளைய பிரதமர்.