ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்கிறாரா ரணில்...நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு!

கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகமான அறிவகத்தில் அக்டோபர் 12 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்கிறாரா ரணில்...நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு!
Published on
Updated on
1 min read

இலங்கை அரசு தமிழர்கள் மீது தொடுத்த போரால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. ஆயுதங்கள், போர்த் தளவாடங்கள் மற்றும் சர்வதேச நிதி உதவியின் வழியாகத் தான் தமிழீழ விடுதலைப் புலிகளை சிறீலங்கா அரசால் வீழ்த்த முடிந்தது. இலங்கையை முழுவதுமாக அடகு வைத்து தான் சர்வதேச உதவியைப் பெற்றது அரசாங்கம்.

வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்

இதனால் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையத் தொடங்கி அந்த நாடே திவாலானது. பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்களின் தொடர் போராட்டங்களால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு மற்றும் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். வெளிநாட்டிற்கு சென்று தான் கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது அவர் தாய்லாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். அந்நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள விடுதியில் தங்கி இருக்கும் அவர் அறையில் இருந்து வெளியே வர வேண்டாம் என்று தாய்லாந்து காவல்துறையால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

சிறீதரன் குற்றச்சாட்டு

இலங்கையை சீரழித்த ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்கும் வகையில அதிபர் ரணில் விக்ரமசிங்கர் செயற்பட்டு வருகின்றார் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகமான அறிவகத்தில் அக்டோபர் 12 அன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதாவது இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருக்கும்  ராஜபக்ச குடும்பத்தினரை  பாதுகாக்கின்ற செயற்பாட்டிலேயே இப்போது இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டு வருகின்றார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com