இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷ்யா ஆதரவு !

ரஷ்ய  பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரவ், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதித்துவத்தின் மூலம் பாதுகாப்பு கவுன்சிலை மேலும் ஜனநாயக மயமாக்க வேண்டும் என்றார்.

இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷ்யா ஆதரவு !

ஐநா பொதுச் சபையின் 77 ஆவது கூட்டம் ஐக்கிய அமெரிக்காவின்  நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.

ரஷ்ய அமைச்சர் பேச்சு

இதில் பேசிய ரஷ்ய  பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரவ், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதித்துவத்தின் மூலம் பாதுகாப்பு கவுன்சிலை மேலும் ஜனநாயக மயமாக்க வேண்டும் என்றார். முக்கியமாக இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவை சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள் என்றும் குறிப்பிட்டார்.  அதனால் இரு நாடுகளும் நிரந்தர உறுப்பினர்களாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

உக்ரைன் போர் தொடர்பாக நேட்டோவுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயராக இருப்பதாக கூறிய லாவ்ரவ், ஆனால் அதற்கான முதல் நகர்வு ரஷ்யாவிடம் இருந்து வராது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். தைவான் விவகாரத்தில் அமெரிக்கா நெருப்புடன் விளையாடுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். ஒரே சீனா என்பதில் ரஷ்யா உறுதியான நிலைப்பாட்டுடன் தொடர்ந்து இருக்கும் என்றும் செர்ஜி லாவ்ரவ் குறிப்பிட்டார்.