கொரோனா மோசடிகளை அம்பலப்படுத்திய பிரேசில் அதிபர்…எதிர்க்கும் காவல்துறை!

கொரோனா மோசடிகளை அம்பலப்படுத்திய பிரேசில் அதிபர்…எதிர்க்கும் காவல்துறை!

கோவிட்-19 தொடர்பாக பல்வேறு அதிர்ச்சிகரமான விடயங்களை உலக நாடுகளின் தலைவர்கள் பலர் வெளியிட்டு வந்தனர். இந்தக் கொரோனா வைரஸ் நாடகமென்பது உலக சுகாதார அமைப்பு மற்றும் பில் கேட்ஸ் இணைந்து நடத்து உலகளாவிய மோசடி என சர்வதேச அளவில் பல நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றன.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த போது மாஸ்க் அணிவது அவசியமற்றது என தெரிவித்திருந்தார் போல்ஸனாரோ. கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் பிரேசில் நாட்டு அதிபர் போல்சனாரோ மக்களை எச்சரித்திருந்தார்.

அதிபர் மீது வழக்கு தொடுக்க காவல்துறை அனுமதி கோரியது

பிரேசிலின் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு ஆவணத்தில், ஒரு காவல்துறை பிரதிநிதி, ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு இணங்குவதை தடுக்கும் வகையிலும், ஊரடங்கை மீறுவதற்கு ஊக்கமளிப்பது போல கருத்து தெரிவித்த போல்சனாரோ செயல் குற்றமாகும், அதே நேரத்தில் எய்ட்ஸ் நோயை கொரோனா தடுப்பூசியுடன் இணைத்துப் பேசும் அவரது முயற்சி ஒரு தவறான செயல் என அந்த காவல்துறை பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

போல்சனாரோ மற்றும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு தொடுக்க காவல்துறைக்கு அதிகாரம் அளிக்குமாறு விசாரணைக்கு பொறுப்பான உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸிடம், போலீசார் கேட்டுக் கொண்டனர்.

கடந்த அக்டோபர் மாதம்  ஒரு சமூக ஊடக நேரலையில், அதிபர் போல்சனாரோ, கோவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் எய்ட்ஸ் நோயைஉருவாக்கியதாக இங்கிலாந்து அரசாங்க அறிக்கைகள் காட்டுகின்றன என்று அவர் கூறினார்.

போல்சனாரோவிடம் இருந்து  விசாரணைகளை முடிக்க கூடுதல் நடவடிக்கைகள் தேவை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பொதுவாக அதிபருக்கு சட்டப்பூர்வ பிரதிநிதித்துவத்தை வழங்கும் தலைமை வழக்குரைஞர் அலுவலகம், இந்தக் கோரிக்கைக்கு உடனடியாக எந்த கருத்துகளும் தெரிவிக்கவில்லை.

 மருந்து வியாபாரிகளின் கையில் சமூக ஊடகங்கள்

இன்று மருந்து வியாபாரிகளின் கையில் தான் பெரும்பாலான சமூக ஊடகங்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா தடுப்பூசி ஆபத்துகளை விளக்கும் மற்றும் அதற்கு எதிரான போராட்டங்கள் குறித்த 1 லட்சத்திற்கும் மேலான காணொலிகள் யூடியூப் நிறுவனத்தால் நீக்கப்பட்டுள்ளது. கொரோனா மோசடி மற்றும் தடுப்பூசிகளுக்கு எதிராக கருத்துகளை கூறுபவர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்த போல்சனாரோ கூறிய கருத்துக்களுக்குப் பிறகு பேஸ்புக் மற்றும் யூடியூப் இரண்டிலிருந்தும் அவரது கணக்குகள் நீக்கப்பட்டது.