புதினை எதிர்த்து போராட்டம்! 1400 பேர் கைது!

“ஆள்திரட்டல்”க்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை கைது செய்தும், ராணுவத்திற்கு கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

புதினை எதிர்த்து போராட்டம்! 1400 பேர் கைது!
விருப்பமில்லை எனக் கூறியவரை, கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்ற காவலர்கள்

ஆள்திரட்டலுக்கு எதிராக, ரஷ்ய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, ராணுவ பயிற்சி பெற்றவர்கள் மற்றும், ஓய்வு பெற்றவர்கள் மீண்டும் ராணுவத்தில் இணைந்து, பகுதி ஆள்திரட்டல் நடத்தி, உகரினுக்கு எதிராக போரிட தயாராகி வருகிறது ரஷ்யா.

இந்நிலையில், சாலைகளில் போராட்டம் நடத்தி வரும் பொது மக்களை அடக்கி, இது வரை சுமார் 1400 பேரை ரஷ்ய காவல் துறை கைது செய்துள்ளது. மேலும் ,தனக்கு ராணுவத்தில் சேர்ந்து உக்ரைனுக்கு எதிராக போராட விருப்பம் இல்லை என எதிர்ப்பு தெரிவித்த, “ஆள்திரட்டலுக்கு” தகுதியானவர்கள் பலரை வலுகட்டாயமாக இழுத்துச் சென்ற வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனால், மக்களுக்கு பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. ஏன் என்றால், எப்போது வேண்டும் என்றாலும், அணு சக்தி தாக்குதல் நடத்த ரஷ்யா தயாராக இருக்கும் பட்சத்தில், இந்த சம்பவம், ரஷ்ய பொது மக்கள் மீதான பதற்றத்தை உலகளவில் உருவாக்கியுள்ளது என்பதில் எந்த ஆச்சிரியமும் இல்லை.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | புதின் மரண பீதியில் இருக்கிறாரா? அப்போ அவ்வளவு தானா?