நாட்டு மக்களுக்கு விடுதலை... மாஸ்க் அணிய கட்டாயமில்லை...

நாட்டு மக்களுக்கு விடுதலை... மாஸ்க் அணிய கட்டாயமில்லை...

பிரான்சில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற விதி தளர்த்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து, பல உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று பல்வேறு நாட்டுகள் உத்தரவிட்டு இருந்தது. இந்த நடவடிக்கையால் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது.

சுமார் 7 கோடி மக்கள் தொகை கொண்ட பிரான்ஸில் தினசரி தொற்று பாதிப்பு தற்போது குறைந்து வந்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், நாட்டில் தொற்று பாதிப்பை 5,000 மாக  குறைக்க திட்டமிட்டார்.  அவர் திட்டமிட்ட படி கொரோனா தொற்று குறைந்துள்ளதால், அந்நாட்டு பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற விதி தளர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் வெளியிடங்களில் கட்டாய முகக்கவசம் என்பது சில விதிவிலக்குகளுடன் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், அரங்கங்களிலும் மாஸ்க் அணிய வேண்டும். மேலும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 20ம் தேதி ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் சுமார் 3.5 கோடி மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட பிரான்ஸ் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.