இந்த அழகுல இவங்களுக்கு கேஷ்மீர் கேக்குதாம்... - கேளி செய்யும் நெட்டிசன்கள்!

ஆபத்தை உணராமல் ப்ளாஸ்டிக் பைகளில் எரிவாயு பயன்படுத்தும் பாகிஸ்தானியர்களை நெட்டிசன்கள் படு பயங்க்ரமாக கேளி செய்து வருகின்றனர்.
இந்த அழகுல இவங்களுக்கு கேஷ்மீர் கேக்குதாம்... - கேளி செய்யும் நெட்டிசன்கள்!
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் ஆபத்தை உணராமல் பிளாஸ்டிக் பைகளில் சமையல் எரிவாயுவை எடுத்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கத்தால் பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் சமையல் எரிவாயுவைப் பெறுவதற்கு மக்கள் மேற்கொள்ளும் மாற்று நடவடிக்கைகளை காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

சிலிண்டர்களுக்குப் பதிலாக பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட எரிவாயுவை சிறுவர்கள் எடுத்து செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே, தாலிபர்கள், பாகிஸ்தான் 1971ம் ஆண்டு இந்தியாவுடன் கையெழுத்து போட்ட ஓப்பந்தத்தை கேளி செய்து, பாகிஸ்தானியர்களை கோழைகள் என பதிவுகளை போட்டு வரும் நிலையில், ஆபத்தை உணராத பாகிஸ்தானியர்கள் ப்ளாஸ்டிக் பைகளில் எரிவாயு எடுத்துச் சென்று பயன்படுத்துவது குறித்து நெட்டிசன்களும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

“சாதாரண குழந்தைக்கு கூட தெரிந்த விஷயம், ப்ளாச்டிக் பொருட்களுக்கும், கேஸ், பெட்ரோல் போன்ற எரிவாயுக்களுக்கும் கண்டிப்பாக ஒத்துப்போகாது என... இந்நிலையில், பெரும் ப்ளாஸ்டிக் பைகளில் எரிவாயு எடுத்து செல்லும் பாகிஸ்தானியர்க எவ்வளவு பெரும் முட்டாள்கள்... இதில், அவர்களுக்கு பாகிஸ்தான் வேறு கேட்கிறது...” என கமெண்ட் செய்து பதிவிட்டு வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com