போராட்ட இயக்கத்தை கட்சியாக மாற்றுங்கள்...இலங்கை போராட்டக்காரர்களுக்கு ஆலோசனை!

போராட்ட இயக்கத்தை கட்சியாக மாற்றுங்கள்...இலங்கை போராட்டக்காரர்களுக்கு ஆலோசனை!

காலிமுகத்திடலிலிருந்து கூடாரங்கள் அகற்றப்பட்டு போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டதால் போராடடம் முடிவடையவில்லை ஏனெனில் போராட்டம் என்பது ஒரு உணர்வு என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  கொழும்பில் ஆகஸ்ட் 13 அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,“காலிமுகத்திடல் என்பது ஒரு போராட்டக்களம் மட்டும் தான். ஆனால், போராட்டம் என்ற உணர்வு மக்களிடம் எப்போதும் உள்ளது. அதனால் போராட்டம் தோல்வியடையவில்லை. அது வெற்றியடைந்துள்ளது. அதனால் தான் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். அத்துடன் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளார். போராட்ட இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்து ஆட்சி செய்யுங்கள்.

ராஜபக்ச சகோதரர்கள் திரைமறைவிலிருந்து ரணிலை வைத்து காய் நகர்த்துவதாக ஒரு கதையும் உள்ளது. அதை சரி செய்யவும் போராட்டம் தொடர வேண்டும். போராடடம் சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். நான் வன்முறையை ஆதரிப்பவன் இல்லை.”எனக் கூறியுள்ளார்.