ஆட்சியை தக்கவைக்க பாலஸ்தீனம் மீது போர்,.. இஸ்ரேலிய பிரதமரை வீழ்த்திய அரபு கட்சி.! 

ஆட்சியை தக்கவைக்க பாலஸ்தீனம் மீது போர்,.. இஸ்ரேலிய பிரதமரை வீழ்த்திய அரபு கட்சி.! 

இஸ்ரேலில் 12 வருடகாலம் ஆட்சியில் இருந்து அசைக்கமுடியாதவர் என்று வர்ணிக்கப்பட்ட பெஞ்சமின் நெதன்யாகுவை எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து வீழ்த்தியுள்ளன. 

2009 முதல் தற்போது வரை 12 ஆண்டுகள் இஸ்ரேலின் பிரதமராக இருந்தவர் பெஞ்சமின் நெதன்யாகு. இஸ்ரேலிய வரலாற்றில் அதிக காலம் பிரதமராக இருந்தவர் இவரே. இவர்மீது 2019ம் ஆண்டில் இருந்து ஊழல் புகார்கள் எழுந்தது. இதைத் தொடர்ந்து இஸ்ரேலில் இரண்டு ஆண்டுகளுக்குள் நான்கு முறை தேர்தல்கள் நடைபெற்ற போதிலும் தெளிவான பெரும்பான்மை முடிவுகள் கிடைக்கவில்லை. சிறிய பெரும்பான்மையில்  பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக தொடர்ந்து வந்தார்.

அதைத் தொடர்ந்து அவரை பதவியிலிருந்து வீழ்ந்த யமினா கட்சியின் தலைவர் நாப்தாலி பென்னட் கடுமையாக முயன்றுவந்தார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த அவர் 8 எதிர் கட்சிகளை இணைத்து ஆட்சியை பிடிக்க முயன்றார். இதன் காரணமாக அரசியலில் தன்னை வலிமை படுத்தவே பாலஸ்தீனியர்கள் மேல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டது.

இஸ்ரேல்-பாலஸ்தீனிய மோதல்கள் முடிவுக்கு வந்த நிலையில், இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் புதிய ஆட்சி தொடர்பாக வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் பாராளுமன்றத்தின் மொத்த எண்ணிக்கையான 120 இல் 60 வாக்குகள் புதிய அரசுக்கு ஆதரவாக கிடைத்தன. 59 வாக்குகள் எதிராக கிடைக்க 1 வாக்கு வித்தியாசத்தில் பெஞ்சமின் நெதன்யாகுவை எதிர்க்கட்சிகள் வீழ்த்தின. 

புதிய அரசின் பிரதமராக யமினா கட்சியின் தலைவர் நாப்தாலி பென்னட் பதவியேற்றுக்கொண்டார். நாப்தாலி பென்னட்  யெஷ் அடிட் கட்சித் தலைவரான யாயிர் லபீட்டுடன் பென்னட் அதிகார பகிர்வு ஒப்பந்தம் செய்துள்ளார். அதன்படி, முதல் இரு ஆண்டுகள் பென்னட்டும், அடுத்த இரு ஆண்டுகள் லபீட்டும் பிரதமராகப் பதவி வகிப்பார்கள். இந்த அமைச்சரவையில் 27 அமைச்சா்கள் இடம்பெற்றுள்ளனா். அவா்களில் 9 பேர் பெண்கள். மேலும் இந்த புதிய அரசில் வலதுசாரி, இடது, மையவாதியுடன், அரபு சமூகத்தை சேர்ந்த ஒரு கட்சியும் உள்ளது. இந்த அரபு கட்சியின் ஓட்டினால் தான் பெஞ்சமின் நெதன்யாகு தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.