இந்திய அரசு தமிழர்களின் நண்பர் அல்ல...இலங்கைத் தமிழர்களின் கோபம் ஏன்?

இந்திய அரசு தமிழர்களின் நண்பர் அல்ல...இலங்கைத் தமிழர்களின் கோபம் ஏன்?

இலங்கையில் சைவ கோவில்கள் அழியும் போது  மோடி ஏன் ஊமையாக போனார் என்று வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல்போனவர்களின் உறவுகளின் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

போர்க்குற்றங்களுக்கு நீதியைக் கொடுக்குமா அமெரிக்கா?

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், சர்வதேச ஒற்றுமை மற்றும், உலகளவில் குழந்தைகளிடையேயான விழிப்புணர்வு அவர்களின் நலனை மேம்படுத்துவதற்காக இந்த நாள் உருவாக்கப்பட்டது.

இன்றும் நாம் இலங்கை இராணுவத்தினரால் கடத்தப்பட்ட எமது பிள்ளைகளை தேடிக்கொண்டிருக்கின்றோம். இந்த இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமே நீதியையும் பொறுப்புக்கூறலையும் வழங்க முடியும்.

அழியும் சைவக் கோவில்கள்

இலங்கையானது சைவகோவில்களை அழிக்கிறது. இந்த நாட்டில் சட்ட ஒழுங்கு இல்லை.குருந்தூர் மலையில் உள்ள இந்து கோவில் அழிக்கப்பட்டு விகாரை  கட்டப்பட்டு வருகிறது. நீதிமன்ற தடை உத்தரவு இருந்தும், சிங்கள பௌத்த பிக்குகள் விகாரையை கட்டியெழுப்புகின்றனர். இப்போது திருக்கோணேஸ்வரம் கோவிலை அழிக்க சிங்களம் விரும்புகிறது. 

இந்தியா தமிழர்களின் நண்பன் அல்ல

மகாசங்கத்தின் கூற்றுப்படி இது வி ஜயன் வருவதற்கு முன்பே திருக்கோணேஸ்வரம் இருந்துள்ளது. இந்து பா. ஜ.க எங்கே? அவர்கள் பழைய இந்துக்களின் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்காக இருந்தால், அவர்கள் ஏன் ஊமையாகிறார்கள்? மோடி ஆட்சிக்கு தமிழர்கள் மீது அக்கறை இல்லை. இந்தியா தமிழர்களின் நண்பர்கள் அல்ல என்பதையும் தமிழர்கள் படும் துன்பங்களுக்குச் செவிசாய்க்காக்க மாட்டார்கள் என்பதையும் பா. ஜ.க தெளிவாக  சொல்லுகிறது.

சிங்களவர்கள் உண்மையான வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும், எமது நிலத்தையும் கலாச்சாரத்தையும் ஆக்கிரமிப்பதற்கு வன்முறையைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.அதேபோல  ஒவ்வொரு தமிழர்களும் ஒன்றிணைந்து, பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பட்ட தாயகம் என்ற தமிழர்களின் கோரிக்கையைத் தீர்ப்பதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டிற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

சர்வதேச சிறுவர் நாள்
 
இதேவேளையில், எமது உறவுகளை தொலைத்துவிட்டு ஒவ்வொருநாளையும் துக்கத்துடனேயே கழிப்பதாக வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், இலங்கை அரசிடம் ஏமாந்த நாங்கள் சர்வதேசத்திடம் நீதியை கேட்டு தொடர்ச்சியாக போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம். சர்வதசேமும் எங்களை ஏமாற்றாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 51 வது கூட்டத்தொடரிலாவது எமக்கான தீர்வினை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிநிற்கின்றோம்.

நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை

எமது உறவுகளை தொலைத்துவிட்டு ஒவ்வொரு நாளையும் நாம் துக்கத்துடனேயே கழிக்கின்றோம். நாம் மகிழ்ச்சியாக இல்லை. எனவே  எமது உறவுகள் எங்கே அவர்களுக்கு என்ன நடந்ததுஎன்பதற்கான சரியான பதிலை சர்வதேசம் எமக்கு வழங்கவேண்டும்.இல்லாவிடில்  எமது உறவுகள் வரும்வரைக்கும் நாம் போராடிக்கொண்டே இருப்போம் என்றனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு எதிரான பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.