துபாயில் நடைபெறவுள்ள உலக கண்காட்சி!! டிக்கெட் விவரம் வெளியீடு..!

துபாயில் அக்டோபரில் துவங்கும் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி..!

துபாயில் நடைபெறவுள்ள  உலக கண்காட்சி!! டிக்கெட் விவரம் வெளியீடு..!

துபாயில் நடைபெறவுள்ள ”எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி”க்கான டிக்கெட் விலை குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் ஒவ்வொரு நாட்டில் நடைபெறும் இந்த உலகக் கண்காட்சியில் 170-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களது புதிய படைப்புகளை காட்சிக்கு வைப்பது வழக்கம்.

அந்த வகையில் 2020-ம் ஆண்டுக்கான உலகக் கண்காட்சி கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது வரும் அக்டோபர் மாதம் முதல் துபாயில் நடைபெறவுள்ளது. 

192 நாடுகளை சேர்ந்த கண்டுப்பிடிப்புகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெறவுள்ளது. 6 மாதங்களுக்கு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள கண்காட்சியில் இரண்டரை கோடி மக்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது இந்த கண்காட்சியின் டிக்கெட் விலை குறித்த விவரங்களை பார்க்கலாம்..

ஒருமுறை கண்காட்சியை பார்வையிட நபர் ஒருவருக்கு 95 திர்ஹாம் இந்திய மதிப்பில் ரூ.1,935.72 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே 6 மாதத்திற்கான பாஸ் பெறுவதற்கு ரூ.10,091, மாதாந்திர பாஸ் பெறுவதற்கு ரூ.3,973 எனக் கூறப்பட்டுள்ளது. சிறப்பு சலுகையாக 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், மாணவர்களுக்கும் இலவச அனுமதி அளிக்கப்படுகிறது. 

வருகிற 18-ந் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள டிராவல் ஏஜெண்டுகள், சுற்றுலா நிறுவனங்கள், ஓட்டல் குழுமங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 500 அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்கள் டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எக்ஸ்போ 2020 வளாகத்திற்குள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் ஒரு நாளில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கண்காட்சி தலைவர் ரீம் அல் ஹாஷெமி கூறியுள்ளார்.