உலகை உலுக்கும் கொரோனா வைரசின் பிறப்பிடம் எது? - அதிர்ச்சி தகவல்

உலகை உலுக்கும் கொரோனா வைரசின் பிறப்பிடம் எது? - அதிர்ச்சி தகவல்

உலகை உலுக்கும் கொரோனா வைரசின் பிறப்பிடம் எது? என்பது குறித்து அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் மோதல் வலுத்து வருகிறது.

ஒரு வருடத்திற்கு மேலாக மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனாவல் பலர் உயிரிழந்துள்ளன. இந்நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை பரவிவருகிறது.. ஆனால் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் தற்போது பாதிப்புகள் குறைந்து வந்தாலும், இன்றும் மனித குலத்தை கதிகலங்க வைத்து கொண்டுதான் இருக்கிறது.

உலகளவில் 17 கோடியே 53 லட்சம் பேரை பாதித்து, 38 லட்சம் பேரின் இன்னுயிர்களைப் பறித்துள்ளது. சீனாவின் உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்து இந்த வைரஸ் கசிந்திருக்கலாம் என்ற ஊகம் மேலும் வலுத்துள்ள நிலையில், சீனாவின் வெளியுறவு கொள்கை ஆலோசகர் யாங் ஜீச்சியும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனும் தொலைபேசி வழியாக பேசினர்.

அப்போது கொரோனா வைரஸ் பிறப்பிடம் தொடர்பாக இருவர் இடையே மோதல் வெடித்தது. அப்போது, கொரோனா வைரஸ் பிறப்பிடம் எது என்று கண்டுபிடிப்பதை அரசியல் ஆக்குவதைத் தவிர்க்கவும், சர்வதேச தொற்றுநோய்க்கு எதிரான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தவும் அமெரிக்காவை சீனா வலியுறுத்துவதாக யாங் ஜீச்சி குறிப்பிட்டார்.

அதற்கு காட்டமாக பதிலடி கொடுத்த ஆன்டனி பிளிங்கன், கொரோனா வைரசின் தோற்றம் எங்கே என்பதில் ஒத்துழைப்பதும், வெளிப்படையாக நடந்து கொள்வதும் முக்கியம் என்றும், அதில் உலக சுகாதார நிறுவன நிபுணர்களின் இரண்டாம் கட்ட ஆய்வு உள்ளிட்டவையும் அடங்கும் எனவும் கூறினார்.