வெளியானது புதிய ஆதாரம்... சீனா தான் காரணம்.. அமெரிக்க பத்திரிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

வெளியானது புதிய ஆதாரம்... சீனா தான் காரணம்.. அமெரிக்க பத்திரிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை சீன ஆய்வகத்தில் உருவாக்கியதற்கான புதிய ஆதாரம், அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் அம்பலமாகி உள்ளது.

உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோரை பாதித்தும், 34 லட்சத்துக்கு மேற்பட்ட உயிர்களை காவு கொண்டும்  கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா இன்னும் தனது ஆட்டத்தை நிறுத்தவில்லை. மேலும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் ஒட்டுமொத்த உலகமும் திண்டாடி வருகிறது.

இப்படி உலக மக்களை கொன்று குவித்தும், உலக பொருளாதாரத்தை சீரழித்து வரும் இந்த கொரோனா வைரஸ், சீனாவின் உகான் நகரில் உள்ள சந்தை ஒன்றில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவியதாக சீனா கூறி வருகிறது.

ஆனால் உகானில் உள்ள வைரஸ் ஆய்வு நிறுவனத்தில் இருந்துதான் இந்த வைரஸ் பரவியதாகவும், சீனாதான் வேண்டுமென்றே இந்த வைரசை பரப்பியதாகவும் பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இதனிடையே இந்த வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய நினைத்த உலக சுகாதார நிறுவனம் சர்வதேச நிபுணர் குழு ஒன்றை அமைத்து அதை உகானுக்கு அனுப்பி ஆய்வு நடத்தியது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் உகான் ஆய்வகத்தில் உருவாக்கப் பட்டதற்கான புதிய ஆதாரம் ஒன்றை அமெரிக்க உளவுத்துறை அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது. இதை அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பத்திரிகை வெளியிட்டு உள்ளது.

அதில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாத்தில் இந்த ஆய்வகத்தில் பணியாற்றி வரும் பல ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தொற்று மற்றும் பிற பருவகால நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட 3 ஆய்வாளர்கள் மருத்துவமனையின் சிகிச்சையை நாடியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்த வைரஸ் உகான் ஆய்வகத்தில் இருந்துதான் பரவியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உலக நாடுகளை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.