நாயின் பிறந்தநாளுக்கு ரூ.11லட்சம் செலவு செய்த சீன பெண்..!

இளம் பெண்ணை தட்டி தூக்கிய போலீசார்..!

நாயின் பிறந்தநாளுக்கு ரூ.11லட்சம் செலவு செய்த சீன பெண்..!

இப்போழுது எல்லாம் மனிதர்களுக்கு பிறந்தநாள் என்றாலே லட்சக் கணக்கில் செலவு செய்து கேக்கட்டிங் நடத்தி, அதனை ஊர் அறிய உறவினர்களை வரவழைத்து விருந்து வைத்து ஒரு திருமணத்திற்கான செலவையும் செய்து விடுகிறார்கள். அதுவும் குறிப்பாக ஒரு குழந்தையின் முதல் வயது பிறந்தநாள் என்றால் போதும், அந்த குழந்தைக்கே அங்கு என்ன நடைபெறுகிறது என்பது தெரியாது, ஆனால் அக்குழந்தையின் பெற்றோர் அதனை பிரம்மாண்டமாக கொண்டாடத் துவங்கிவிட்டனர். இந்த கலாச்சாரம் கடந்த சில வருடங்களாகத் தான் நடைமுறையில் அதிகம் காணப்படுகிறது. காரணம், இந்த விழாவை பொதுமக்கள் தங்களது அந்தஸ்தை காட்டும் 
நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. இது பரவாயில்லை, மனிதன் வளர வளர இதனை பார்த்து மகிழ்ச்சியடைவார்கள் என மனதை ஆறுதல் படுத்திக் கொள்ளலாம்.. ஆனால் சிலர் தங்களது வளர்ப்பு பிராணிகளுக்கு இதேபோல செலவு செய்து பிறந்தநாள் கொண்டாடும் கலாச்சாரத்தை தான் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. 

அந்த வகையில் தான் சீனாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது வளர்ப்புப் பிராணியான நாய்க்கு பிறந்தநாள் கொண்டாட எண்ணி, அதற்காக இந்திய மதிப்பில் சுமார் 11 லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. சீனாவின் சாங்க்‌ஷா பகுதியிலுள்ள சியான் ஜியாங் ஆற்றுப்பகுதியில் வசித்து வரும் பெண் 
ஒருவர், தனது நாயின் 10-வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட எண்ணியுள்ளார். அதற்காக சுமார் 520 ட்ரோன்களை வாடகைக்கு எடுத்து, அவற்றை ஹேப்பி 10வது பர்த்டே டௌடௌ என்ற எழுத்துகள் வடிவிலும், நாயின் உருவப்படம் போன்றும் பறக்க விட்டுள்ளார். ஆனால் சீனாவில் ஆற்றங்கரையோரங்களிலும், 
குடியிருப்பு பகுதிகளிலும் ட்ரோன் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிறந்தநாள் பார்ட்டி அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பிறந்தநாள் விழாவை தடுத்து நிறுத்திவிட்டனர். கிறிஸ்துமஸ் தொப்பு 
அணிந்து நடப்பது என்னவென்றே தெரியாமல் பிறந்தநாள் கேக் முன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கும் அந்த நாயை காணும் போது, நாம் பேசாமல் அந்த நாயாக இருந்திருக்கலாம் என தோன்றுகிறது.