அமேசான் காடு அழிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து பிரேசில் அதிபருக்கு உலக அளவில் எதிர்ப்பு...

அமேசான் சட்டவிரோத காடழிப்பை தடுக்கும் வகையில் சுற்றுச்சூழல் குற்றங்களுக்கான அபராதத்தை அதிகரிக்கும் உத்தரவில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கையெழுத்திட்டுள்ளார். 

அமேசான் காடு அழிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து பிரேசில் அதிபருக்கு உலக அளவில் எதிர்ப்பு...

உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு வந்தன. 2012 வரை சட்டவிரோத காடழிப்பு, தீவைத்தலுக்கு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில் பிரேசில் அதிபராக ஜெய்ர் போல்சனாரோ பொறுப்பேற்ற பின் காடழிப்பு என்பது சர்வ சாதாரணமாக மாறி விட்டது.

அதிக விவசாயம், சுரங்கத் தொழில் ஆகியவை நாட்டின் வறுமையைப் போக்கும் என்பதால் காடழிப்பு நியாயம் என அவர் விளக்கம் அளித்தார்.இந்தநிலையில் அமேசான் சட்டவிரோத காடழிப்பிற்கு எதிராக உலகம் முழுவதிலும் இருந்து கடும் கண்டனம் எழுந்தது.

குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பிரேசிலுக்கு எச்சரிக்கை விடுத்தன. இந்தநிலையில், சட்டவிரோத காடழிப்பு அபராத உயர்வில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ கையெழுத்திட்டுள்ளார்.

2028-ம் ஆண்டுக்குள் சட்டவிரோத காடழிப்பு முடிவுக்கு கொண்டு வரப்படும் என்ற ஐநா காலநிலை மாற்ற உச்சி மாநாட்டு தீர்மானத்தின் அடிப்படையில் அமேசான் காடுகளை பாதுகாப்பதற்காக போல்சனரோ எடுத்த முதல் உறுதியான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.