உலகின் சவாலான கடல் பந்தயம்.....

உலகின் சவாலான கடல் பந்தயம்.....

ஆப்பிரிக்காவில் உலகின் சவாலான கடல் வழி படகு பந்தயம்  தொடங்கியது.  ஆப்பிரிக்காவின் கேப் வெர்டேவில் உள்ள லெக் டூவில் தொடங்கிய இந்த போட்டியில் ஐந்து குழுக்கள்  பங்கேற்றுள்ளது. 

கடற்படையை சேர்ந்த ஐந்து படகுகளில் புறப்பட்ட போட்டியாளர்கள்  4 ஆயிரத்து 600  கடல் மைல்கள் தூரத்தில் பயணிக்கும் போது வெப்பக் காற்று, குளிர்ந்த காற்று உள்ளிட்ட பல்வேறு கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

போட்டியாளர்கள் பூமத்திய ரேகையைக் கடந்து தெற்கு அட்லாண்டிக் பகுதிக்குள் அடுத்த இரண்டரை நாட்களில் கடந்து தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் போட்டியை நிறைவு செய்ய உள்ளனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   2002 குஜராத் கலவரம்.... நிரூபிக்கப்படாத குற்றமும் விடுதலையும்....