டோங்கோ - சுனாமியில் நாய்களை காப்பாற்ற முயற்சித்த பெண் அலையில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சோகம்...

கடலுக்கு அடியில் வெடித்து சிதறிய எரிமலையால் உருவான சுனாமியில் நாய்களை காப்பாற்ற சென்ற இங்கிலாந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டோங்கோ - சுனாமியில் நாய்களை காப்பாற்ற முயற்சித்த பெண் அலையில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சோகம்...

தீவு நாடான டோங்கோ நாட்டின் கடலுக்கு அடியில் நீரில் எரிமலை வெடித்தது. அதையடுத்து அந்த நாட்டின் கரை பகுதியை சுனாமி அலைகள் தாக்கின. அப்போது ஆழிப்பேரலையில் இருந்து நாய்களை காப்பாற்ற முயன்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் உயிரிழந்தார்.

இதனை பற்றி அவரது சகோதரி கூறுகையில் “என் சகோதரி ஏஞ்சலா குளோவர் மற்றும் அவரது கணவரும் கடந்த 2015 முதல் டோங்கோவில் வசித்து வந்தனர்.விலங்குகளின் மீது அதீத நேசம் கொண்ட அவர்கள் டோங்கோ பகுதியில்  விலங்குகள் நல சங்கம் அமைத்து அதனை பாதுகாத்து வந்துள்ளனர். தனது சகோதரிக்கு தெற்கு பசிபிக் பெருங்கடலை ஒட்டி வாழ வேண்டுமென்று ஆசை. அதனால் டோங்கோ பகுதியில் வசிக்க முடிவு செய்து வாழ்ந்து வந்ததாக கூறினார். அவர் தீவில் எரிமலை வெடித்து சிதறிய காட்சிகளையும் தனது செல்போன் மூலம் படம் பிடித்து வைத்துள்ளார் என்பதனை தெரியப்படுத்தினார்.

அவ்வப்போது  சுனாமி அலைகள் எழுந்ததை கண்ட  அவர் நாய்களை காக்க முயற்சித்துள்ளார்.அப்போது அவர் அலைகளில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்ததாக அவளது கணவர் சொல்லி அறிந்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். இது விபத்து என்பது எங்களுக்கு புரிகிறது. அவள் தனது வாழ்நாளின் இறுதியில் அவளுக்கு பிடித்த இடத்தில் இருந்தாள்” என சொல்கிறார் அவரது சகோதரர் நிக் எலினி. 

ஏஞ்சலா குளோவரின் மரண செய்தியை அறிந்து அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என அனைவரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.