குழந்தை பிறப்பிற்கு அரசு வழங்கும் நிதியுதவியில் ஊழல் செய்த பெண் கைது..

குழந்தை பெற்றெடுத்த 3 மாதங்களில் இரண்டாவது குழந்தையை பிரசவித்தது போல பணத்திற்காக நாடகமாடி வந்த பெண்ணை கைது செய்தனர்.

குழந்தை பிறப்பிற்கு அரசு வழங்கும் நிதியுதவியில் ஊழல் செய்த பெண் கைது..

பீகார் மாநிலத்தின் ஹர்பூரில் அமைந்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஆஷா ரீட்டா தேவி.28 வயதான இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றுள்ளது.உஜியர்ப்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதியன்று ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.குழந்தைகளை பெற்றெடுக்கும் ஏழை எளிய தாய்மார்களுக்கு ஜனனி சுரஷா யோஜனா திட்டம் அடிப்படையில் பீகார் அரசு அவர்களது வங்கிக் கணக்கில் நிதியுதவி வழங்கியது.இந்த நிதியை இவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர்கள் பட்டியலில் இவரின் பெயர் இடம்பெற்றிருப்பதை கண்ட ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் அதனை சரி பார்த்த போது அதே போல் நவம்பர் 4 ஆம் தேதியும் அவரது பெயர் பதிவாகி இருந்தது தெரிய வந்தது.ஒரு குழந்தை பெற்ற 3 மாதத்தில் மற்றொரு குழந்தை எவ்வாறு என மருத்துவர்கள் ஆராய தொடங்கியதாக சொல்லப்படுகிறது.ஒரு பெயரில் இருவர் இருக்கிறார்களா என பதிவேட்டுகளில் சோதித்து பார்த்ததாக தெரியபடுத்தினர்.விவரங்கள் எல்லாம் ஒன்றாக இருக்கவே மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்ததாக சொல்கின்றனர்.

மேலும் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த திட்டத்தின் கீழ் பணத்தை எடுப்பதற்காக முறைகேடு நடந்துள்ளது என்பதனை ஆரம்ப சுகாதார துறையினர் புரிந்து கொண்டனர்.அவ்வப்போது வேறு ஒரு பெண்ணை பிரசவத்திற்காக அழைத்து வந்த நிலையில் அந்த பெண்ணின் பெயருக்கு பதிலாக தனது பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவிட்டு உள்ளார்.இதனை போன்று இரண்டாவது முறையாக அரசின் திட்டத்தை பயன்படுத்தி முறைகேடு செய்ய முற்பட்ட போது இவர்களின் ஊழல் தெரியவந்தது. மேலும் இது குறித்து தொடரப்பட்ட விசாரணையில் அந்த பெண் மீது காவல் துறையினர் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இந்த சம்பவமானது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.