ஒலிம்பிக் போட்டி நடக்குமா? நடக்காதா?

ஜப்பானில், அடுத்த இரு வாரங்களில் ஒலிம்பிக் போட்டி தொடங்கவுள்ள நிலையில், தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டி நடக்குமா? நடக்காதா?

ஜப்பானில், அடுத்த இரு வாரங்களில் ஒலிம்பிக் போட்டி தொடங்கவுள்ள நிலையில், தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸால் ஜப்பான் மிகுந்த பாதிப்பினை சந்திக்கா விட்டாலும், இதுவரை 8 லட்சத்து 10 ஆயிரம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் தீவிர தொற்றால் 14 ஆயிரத்து 900 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக  அங்கு தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. வருகிற திங்கள் கிழமை முதல் அங்கு தீவிர கட்டுப்பாடுகள் அமலாக இருந்த நிலையில், கொரோனா பணிக்குழுவின் ஆலோசனை கூட்டத்தில், அவசர நிலையை அமல்படுத்தி பிரதமர் யோஷிஹிடே சூஹா உத்தரவிட்டுள்ளார்.