இந்தியாவிற்கான அமெரிக்க தூதரை நியமிப்பதில் ஏன் இவ்வளவு தாமதம்?!!

அமெரிக்கா: இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர்.

இந்தியாவிற்கான அமெரிக்க தூதரை நியமிப்பதில் ஏன் இவ்வளவு தாமதம்?!!

இந்தியாவிற்கான அமெரிக்கா மேயர் கார்செட்டியின் நியமனத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து ஒப்புதல் அளித்து வருகிறது.  இருப்பினும், இது மிகவும் தாமதமாகி கொண்டே செல்கிறது.  இந்த ஆண்டு ஜனவரியில், செனட்டின் வெளியுறவுக் குழு, கார்செட்டியை இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. 

இழுபறியில் அமெரிக்க தூதர்:

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நியமனம் நீண்ட நாட்களாகவே இழுபறியில் உள்ளது.  சில நாட்களுக்கு முன்பு பைடன் நிர்வாகம் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் எரிக் கார்செட்டியை இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமித்தது.  ஆனால் அவரது நியமனம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட்டால் உறுதிப்படுத்தப்படவில்லை. 

ஏன் இந்த தாமதம்?:

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நியமனத்தில் தாமதம் ஏற்படுவது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கேட்டதற்கு, ’இந்தியா-அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான உறவு மிகவும் முக்கியமானது’ என்று  பதிலளித்துள்ளார்.  கார்செட்டியின் நியமனத்தை செனட் உறுதிப்படுத்துவதில் பைடன் நிர்வாகம் உறுதியாக உள்ளது எனவும் பியர் தெரிவித்துள்ளார். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   வாக்களிக்கும் உரிமை சட்டத்தில் வயது குறைப்பு செய்கிறதா நியூசிலாந்து?!!