
95 வயதான இரண்டாம் எலிசபெத், வடக்கு அயர்லாந்துக்கு பயணம் செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், திடீரென பயணத்தை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ள பக்கிங்ஹாம் அரண்மனை, மருத்துவமனையில் ராணி எலிசபெத் ஒரு இரவை கழித்ததாக கூறியுள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பக்கிங்ஹாம் அரண்மனையின் செய்தி தொடர்பாளர், சில நாட்கள் மகாராணி ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறியதாகவும், அதன்படி கடந்த புதன் கிழமை பிற்பகல் வழக்கமான சோதனைகளுக்காக மருத்துவனையில் ராணி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்று மதியம் ராணி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வின்ஸ்டர் கோட்டைக்கு திரும்பி விட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், மகாராணியார் தற்போது நல்ல மனநிலையில் உள்ளார் என்பதை உறுதி செய்துள்ளார்.