வரும் 19 ஆம் தேதி முதல் இலவச கொரோனா பரிசோதனை - வெள்ளை மாளிகை அறிவிப்பு..

இலவச பரிசோதனையானது ஒரு வீட்டில் நான்கு பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

வரும் 19 ஆம் தேதி முதல் இலவச கொரோனா பரிசோதனை - வெள்ளை மாளிகை அறிவிப்பு..

அமெரிக்க நாட்டில் நாள்தோறும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.இதுவரை மொத்தம் 65,904,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 871,215 ஆக உள்ளது.இதனை தொடர்ந்து அமெரிக்க மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பரிசோதனைக்காக அரசால் வலைதளப்பக்கம் தொடங்கப்பட உள்ளதாக அமெரிக்க அதிபரான ஜோ பைடன் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்ததாக சொல்லப்படுகிறது.

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க மக்கள் கொரோனா பரிசோதனையின் வசதிக்காக வரும் 19 ஆம் தேதி முதல் COVIDTests.gov என்ற வலைதள பக்கம் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த வலைதள பக்கத்தில் பெயர் மற்றும் முகவரி குறிபிட்டால் போதும் எனவும்.இது பற்றிய ஆர்டரை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஒரு குடியிருப்பு முகவரியில் 4 பரிசோதனைகளை மட்டுமே அனுமதிப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைக்காக ஆர்டர் செய்த 7 முதல் 12 நாட்களுக்குள் தபால் சேவையின் மூலம் பரிசோதனையின் முடிவுகளை அனுப்பப்பட உள்ளதாக வெள்ளை மாளிகை தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.