உக்ரைன் மீது ரஷ்யா திடீர் தாக்குதல் நடத்த காரணம் என்ன? விளாடிமிர் புதினின் செயலுக்கு பின்னணியில் மதச்சாயம் இருக்கிறதா?

உக்ரைன் மீது ரஷ்யா திடீர் தாக்குதல் நடத்த காரணம் என்ன?  விளாடிமிர் புதினின் செயலுக்கு பின்னணியில் மதச்சாயம் இருக்கிறதா?

உக்ரைன் மீது புடின் அதிரடியாக போர் தொடர்ந்ததற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பின்னணியில் மதம் சார்ந்த விஷயமும் அடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்டை மற்றும் நட்பு நாடுகளை அரவணைத்து வந்த ரஷ்யா, நேற்று அதிரடியாக உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. இதில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் உயிரிழந்த போதும், இன்று மீண்டும் தாக்குதலை தொடர்ந்ததுள்ளது.

இந்த தாக்குதலுக்கு நேட்டோ படையுடன் உக்ரைன் இணைய தீவிரம் காட்டியதே காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ஊடுறுவலுக்கு பின்னணியில், மதச்சாயமும் பூசப்படுகிறது.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவை ஆட்சி செய்த ஒன்றாம் விளாடிமிர், உக்ரைனின் கீவ் பகுதியில் இருந்தே ஆட்சி செய்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் புனிதராக கருதப்படும் சூழலில், அந்த இடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ரஷ்ய அதிபர் புதின் தீவிரம் காட்டுவதாகவும், இதுதவிர அங்குள்ள பழமைவாத திருச்சபையை மீட்டெடுத்து தனது ஆட்சிக்காலத்தில் புதுப்பிக்க புதின் ஆர்வம் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது. இதனாலேயே உக்ரைன் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.