என்ன ஒரு யோசனை ! காணாமல் போன நாயை ட்ரோன் மூலம் மீட்ட அதிகாரிகள்!!

மனிதன் காணாமல் போனாலே கண்டுகொள்ளாத இவ்வுலகில் காணாமல் போன நாயினை ட்ரோனை கொண்டு மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

என்ன ஒரு யோசனை ! காணாமல் போன நாயை ட்ரோன் மூலம் மீட்ட அதிகாரிகள்!!

மில்லி என அழைக்கப்படும் இந்த நாய் ஜனவரி 13 ஆம் தேதியன்று கயிற்றை விட்டு அவிழ்த்துக் கொண்டு ஓடியதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த நாயினை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவத்தில் காணாமல் போன மில்லி என்ற குட்டி நாய் கடலில் சிக்கி அடித்து செல்லப்படும் நிலையில் இருந்ததாக தகவல்கள்  வெளிவந்ததை தொடர்ந்து அதிகாரிகள் சமயோசிதமாக சிந்தித்து டிரோன் மூலம் குட்டியை கண்டறிந்துள்ளனர். அவ்வப்போது அந்த குட்டியானது சேற்றில் சிக்கி தவித்து கொண்டிருந்தது டிரோனில் காட்சியளித்துள்ளது.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் கடலோர படை அதிகாரிகள் என அந்த குட்டியை மீட்டெடுக்க இரண்டு நாட்களாக போராடி வந்ததாக சொல்கின்றனர். இருப்பினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில் அவ்விடத்தில் இருந்த ட்ரோன் பைலட் ஒருவர் டிரோனில் உணவை இணைத்து குட்டியின் தலைக்கு மேல் பறக்கவிட வேண்டும் என முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது.