இரண்டு பெண் மருத்துவர்களின் திருமண முடிவு - மோதிரம் அணிந்து நிச்சயதார்த்தம்.

நீண்ட யோசனைக்கு பிறகே இருவரும் திருமணம் செய்ய முடிவு  எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இரண்டு பெண் மருத்துவர்களின் திருமண முடிவு - மோதிரம் அணிந்து நிச்சயதார்த்தம்.

மராட்டிய மாநிலமான நாக்பூரை சேர்ந்தவர் பரோமிதா முகர்ஜி மற்றும் இவரது தோழியானவர் சுரபிமித்ரா.இவர்கள் இருவரும் ஒன்றாகவே மருத்துவ படிப்பு முடித்ததாக சொல்லப்படுகிறது.சிறு வயதில் இருந்தே ஒன்றாக இருந்து  வருவதால் ஒருவர் மீது ஒருவர் அதிக ஈர்ப்புடன் இருந்ததாக சொல்கின்றனர்.

இதனை தொடர்ந்து ஈர்ப்பு காதலாக மலர தொடங்கியுள்ளது.லெஸ்பியன்களாக மாறிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் உயிரையே வைத்துள்ளனர்.ஒரே மருத்துவமனையில் இருவரும் பணியாற்றியுள்ளனர்.மேலும் ஒரே வீட்டில் இருந்து வந்துள்ளனர்.சிறிது காலம் செல்ல இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.வாழ்க்கையின் இறுதி வரை இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக திருமண முடிவை எடுத்ததாக கூறுகின்றனர்.

இதில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் நானும் மித்ராவும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பதனை ஒளிவுமறைவின்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.இதனை கூறுவதில் துளி கூட எங்களுக்கு வெட்கம் இல்லை என தெரிவித்தனர்.மேலும் எங்களுக்குள் இருக்கும் நல்ல உறவை கடந்த 2013 ஆம் ஆண்டே எனது தந்தையிடம் சொல்லி விட்டதாக கூறினார்.இதனை பற்றி எனது தாயாரிடம் தெரிவிக்கையில் அவர் முதலில் ஒப்புக் கொள்ள வில்லை எனவும் பிறகு எனது தந்தை அவருக்கு புரிய வைத்ததாகவும் தெரியபடுத்தினர்.மேலும் எனது பெற்றோர்கள் இருவரின் மகிழ்ச்சிக்காக சம்மதம் தெரிவித்ததாக கூறினார்.

வாழ்நாள் முழுக்க நாங்கள் சேர்ந்து இருப்போம். இந்த ஆண்டுக்குள் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வோம். அல்லது அடுத்த ஆண்டு நிச்சயம் எங்கள் திருமணம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.டாக்டர் சுரபிமித்ரா கூறுகையில், “எனது குடும்பத்தில் நான் லெஸ்பியனாக இருப்பது தெரியும். எனவே எனது திருமணத்துக்கு அவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நான் உளவியல் படித்தவள். மக்களின் மனநிலை எனக்கு தெரியும்.நீண்ட யோசனைக்கு பிறகே நாங்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம். கடைசி வரை நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.

டாக்டர்கள் பரோமிதா முகர்ஜி, சுரபிமித்ரா இருவரும் உடனடியாக நிச்சயதார்த்தம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி கடந்த 29-ந்தேதி நாக்பூரில் அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். பிறகு ஒருவருக்கு ஒருவர் மோதிரம் அணிவித்து மகிழ்ந்தனர். இதையொட்டி நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் இருவரது வீட்டு உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு லெஸ்பியன் தம்பதிகளை வாழ்த்தினார்கள்.