கொரோனாவுக்கு எதிராக பாரம்பரிய மருந்துகளை பயன்படுத்துகிறோம்  : கொரோனா தடுப்பு குறித்து பிரதமர் மோடி உரை !!

எதிர்கால சுகாதார அவசர நிலைகளை எதிர்த்துப் போராடுவதற்கு, உலக சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனாவுக்கு எதிராக பாரம்பரிய மருந்துகளை பயன்படுத்துகிறோம்  : கொரோனா தடுப்பு குறித்து பிரதமர் மோடி உரை !!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் கொரோனா தடுப்பு 2வது சர்வதேச உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா பெருந்தொற்று இன்னமும் வாழ்க்கை முறையை, விநியோகச் சங்கிலி மற்றும் மக்களின் சமூக நடவடிக்கைகளை பாதித்து வருவதாக தெரிவித்தார். 

இந்தியாவில் மக்களை மையமாக கொண்ட உத்தியை பின்பற்றியதாகவும், உலகில் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியா கொண்டுள்ளதாகவும் கூறிய பிரதமர்,  நாட்டில் 18-வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்தியாவில், கொரோனாவுக்கு எதிரான  போராட்டத்திற்கு துணையாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்   பாரம்பரிய மருந்துகளை விரிவாக பயன்படுத்துவதாகவும் பிரதமர் கூறினார்.

மிகவும் நெகிழ்வான சுகாதார பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க, உலக சுகாதார அமைப்பை கண்டிப்பாக வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் மோடி, இந்த முயற்சியில் முக்கிய பங்காற்ற இந்தியா தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.