கதையே வேற.. கொரோனா முதன் முதலில் வந்தது வவ்வாலில் இருந்து தான நினைச்சோம்.. ஆனால் அது வந்தது?.. கேட்டிங்கனா.. சீ!!

கொரோனா எப்படி பரவி இருக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கதையே வேற.. கொரோனா முதன் முதலில் வந்தது வவ்வாலில் இருந்து தான நினைச்சோம்.. ஆனால் அது வந்தது?.. கேட்டிங்கனா.. சீ!!

கொரோனா வைரஸ், 2 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் சீனாவின் மீன் மார்க்கெட்டில் தோன்றியதாக சொல்லப்பட்டது. அதன்பிறகு, மெல்ல மெல்ல உலக நாடுகளில் பரவியது.

இந்த வைரஸ் லச்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இது எந்த மாதிரியான தொற்று என அறிய ஆயிரக்கணக்கான அறிஞர்கள், விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

இதனிடையே இந்த வைரஸ் சீனா ஆய்வுக் கூடங்களில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவி பெரும் பேரழிவை ஏற்படுத்தியாக குற்றம் சாட்டி வந்த நிலையில்,  கடந்த 2020ம் ஆண்டு கொரோனா உச்சம் அடைந்திருந்த நிலையில், முன்னாள் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இதனை சீன வைரஸ் என்றே பெயரளித்து குற்றம் சாட்டி வந்தார். இதற்கு சீனாவும் கொந்தளித்தது..தொடர்ந்து இது குறித்த சர்ச்சை பெரும் அளவில் பேசப்பட்டு வந்தது.

இதையடுத்து, இந்த கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து 3 வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன... அதில் 2 உகான் நகரில் உள்ள சந்தையில் இருந்து பரவியது உறுதி செய்யப்பட்டது. மேலும், உயிருள்ள பாலூட்டி ரக விலங்கில் இருந்து கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து எந்த ஒரு தகவலும் உறுதியாக வெளியாகவில்லை. ஆரம்பத்தில் வவ்வாலில் இருந்து தான் கொரோனா பரவியது என செய்திகள் வெளிவந்தன.

ஆனால், தற்போது, இந்த கொரோனா வைரஸ் சைனீஸ் ரக்கூன் என்ற நாயிடம் இருந்து பரவி இருக்கலாம் என ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து இன்னும் ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால், இந்த கொரோனா எப்படி, யாரிடம் இருந்து பரவியது என்பது தெரிந்தால் மட்டுமே இதை அழிக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.