தீவிரமடையும் போர்.. 5,977ல் - 1,588 அணு ஆயுதங்களை உக்ரைன் எல்லையில் குவித்த ரஷ்யா..!

போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைன் எல்லையில், அணு ஆயுதங்களை ரஷ்யா குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தீவிரமடையும் போர்..  5,977ல் - 1,588 அணு ஆயுதங்களை உக்ரைன் எல்லையில் குவித்த ரஷ்யா..!

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. போரால் உக்ரைனின் கீவ், கார்கிவ் ஆகிய நகரங்கள் கடும் சேதத்துக்கு ஆளாகியுள்ளன.

இந்நிலையில், போரை தீவிரப்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், உக்ரைன் எல்லையில் ரஷ்யா அணு ஆயுதங்களை குவித்துள்ளதாக கூறப்படுகிறது. 
ரஷியாவிடம் 5,977 அணு ஆயுதங்கள் உள்ள நிலையில்,  உக்ரைன் எல்லையில் 1,588 அணு ஆயுதங்களை குவித்துள்ளது. இதுதவிர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும், குறைந்த தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளையும் ரஷ்யா தயார் நிலையில் வைத்துள்ளது.  உள்ளது. வான்வெளி தாக்குதல் நடத்த 34 சுகோய் போர் விமானங்களும், 31 மற்றும் மிக் 31 ஏ ரக போர் விமானங்களும் தயார் நிலையில் உள்ளன. 

கடல் வழி தாக்குதல் நடத்த போர் கப்பல்களும், அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் நீர் மூழ்கி கப்பல்களும் தயார் நிலையில் உள்ளன. அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தும் பட்சத்தில் அது மிகுந்த அழிவை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.