பசிபிக் பெருங்கடலில் வெடித்து சிதறும் எரிமலை..20 கி.மீ உயரத்திற்கு பறக்கும் சாம்பல்கள்!

கடலுக்கு அடியில் எரிமலை வெடித்து வருவதால் கடல் கொந்தளிப்பின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பசிபிக் பெருங்கடலில் வெடித்து சிதறும் எரிமலை..20 கி.மீ உயரத்திற்கு பறக்கும் சாம்பல்கள்!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடுகளில் ஒன்றான டொங்கா.தனி நாடாக கருதப்பட்டு வரும் இதில் மொத்த மக்கள் தொகையே ஒரு லட்சத்து 6 ஆயிரம் என சொல்லப்படுகிறது.இதனை சுற்றியுள்ள நிலப்பகுதி மற்றும் கடலுக்கு அடியிலும் ஏராளமான எரிமலைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

டொங்கா ஹூங்கா ஹாபைய் என்னும் பகுதியில் உள்ள கடலுக்கு அடியில் பிரமாண்டமான எரிமலையின் பெரும்பகுதி உள்ளதாக சொல்கின்றனர்.இந்த எரிமலை சூழ்ந்துள்ள பகுதிகள் செயலற்று இருந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பயங்கர சத்தத்தோடு எரிமலைகள் வெடித்து சிதறி சாம்பல் காட்சிகள் உருவாக தொடங்கின.இதனால் கடலை சுற்றி 5 கி.மீ தூரத்திற்கு சாம்பல் வெளியானதாக தகவல் வெளியானது.எரிமலை வெடித்து வந்ததால் கடலில் சுனாமி அலைகள் உருவாக தொடங்கி அவை கரைகளை கடந்து டொங்கா நகரத்துக்குள் நுழையும் வீடியோக்கள் சமூக  வலைதளங்களில் வைரலாகி வந்தது.

இந்த எரிமலை வெடிப்புகளால் பெரிய அளவிலான சுனாமி அலைகள் உருவாக வாய்ப்புகள் இருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் டொங்கா மட்டுமில்லாமல் நியூசிலாந்துக்கும் சுனாமி எச்சரிக்கை விடுத்தனர்.இதனால் அச்சத்தில் உறைந்த தீவு பகுதிகளில் வசித்து வரும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் படி எச்சரித்து  வந்துள்ளனர்.