சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இடையே காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்கா அதிபர் ஜோபைடன் இடையேயான பேச்சுவார்த்தை காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இடையே காணொலி காட்சி வாயிலாக  பேச்சுவார்த்தை

பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக ரீதியாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. மேலும் இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரம், திபெத், தைவான், இந்தியாவுடனான எல்லை மோதல் போன்ற விவகாரங்களில் சீனா-வை நேரடியாக அமெரிக்கா எதிர்த்து வருகிறது.

இந்நிலையில், இரு நாட்டு தலைவர்களும் காணொலி காட்சி வாயிலாக சந்தித்து பேசுவது என முடிவுசெய்யப்பட்டது. இந்த சந்திப்பை சர்வதேச நாடுகளும் உற்று நோக்கியிருந்த நிலையில் இருவருக்கும் இடையேயான சந்திப்பு காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றுள்ளது. அப்போது இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.