பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை கொண்டு செல்போன் சார்ஜர் - தயாரித்து அசத்திய நிறுவனம்!!

பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை கொண்டு செல்போன் சார்ஜர் - தயாரித்து அசத்திய நிறுவனம்!!

தைவானில் செல்போன் உதிரிபாகங்களை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் ஒன்று பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை கொண்டு செல்போன் சார்ஜர்களை தயாரித்து அசத்திவருகிறது. கொரோனா 200-க்கும் மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்தி வருகிறது என்றால், தொற்றை தடுக்கும் வகையில் நாம் பாதுகாப்பிற்காக பயன்படுத்தி விட்டு தூக்கி எரியும் முகக்கவசங்களால் உலகமே சுற்றுச்சூழல் பாதிப்பை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டிற்கு பிறகு குப்பையில் எரியப்படும் முகக்கவசம் மக்குவதற்கு 450 ஆண்டுகள் ஆகும் என போஷன் ஆசிய அமைப்பானது எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தைவான் நிறுவனம் அதற்கான தீர்வை கண்டறிந்து அறிமுகப்படுத்தியுள்ளது. 

தைபே நகரத்தில் உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை கொண்டு செல்போன் சார்ஜர் பாகங்களை தயாரித்து அசத்திவருகிறது. முகக்கவசங்களை துண்டுகளாக்கி பிளாஸ்டிக் குழம்புடன் சேர்த்து செல்போன் சார்ஜ்களின் மேல்பாகங்களை தயாரித்து வருகிறது அந்நிறுவனம். இதில் முதல் கட்டமாக பயன்படுத்தப்பட்ட 10000 முகக்கவசங்களை  சேகரித்து அவற்றை சுத்தப்படுத்தி அவற்றை துண்டுகளாக்கி கட்ச பொருட்களுடன் சேர்த்து சுமார் 40,000 வயர் லேஸ் செல்போன் சார்ஜர்களை தைவான் நிறுவனம் தயாரித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.