ரஷ்ய தாக்குதலில் உக்ரைனுக்கு ஆதரவளித்த மேற்கு நாடுகளுக்கு நாடாளுமன்றத்தில் நன்றி தெரிவித்த உக்ரைன்!!!

ரஷ்ய தாக்குதலில்  உக்ரைனுக்கு ஆதரவளித்த மேற்கு நாடுகளுக்கு நாடாளுமன்றத்தில் நன்றி தெரிவித்த உக்ரைன்!!!

ரஷ்யாவுடனான மோதலில் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் மேற்கு நாடுகள் கூட்டமைப்புக்கு உக்ரைன் நாடாளுமன்றத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பேசிய உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, ஐரோப்பாவில் பிரிட்டன், போலந்து, உக்ரைன் இடையே புதிய அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். மீண்டும் சோவியத் ரஷ்யாவை உருவாக்க நடைபெறும் முயற்சியை மேற்குல நாடுகள் உணர்ந்து கொண்டதற்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார். ரஷ்யாவின் இந்த முயற்சி,உக்ரைனுக்கு மட்டுமல்ல, ஜனநாயகம், மனித உரிமை மற்றும் சர்வதேச பாதுகாப்பையும் பாதிக்கும் விஷயம் என்றும் அவர் தெரிவித்தார்.