லுஹான்ஸ்க் பிராந்தியம் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் வரும் - ரஷ்யா தெரிவிப்பு!

பேச்சுவார்த்தை மட்டுமே போரை முடிவுக்கு கொண்டு வரும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 

லுஹான்ஸ்க் பிராந்தியம் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் வரும் - ரஷ்யா தெரிவிப்பு!

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தாக்குதல் தொடங்கிய பின்னர் உக்ரைன்-ரஷ்யா இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை நடந்த அந்த நேரத்திலும் மேற்குலக நாடுகளின் நாடாளுமன்றத்தில் காணொலி வாயிலாக பேசி ரஷ்யாவை அனைத்து நாடுகளும் சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்திக் கொண்டிருந்தார்.

இது ரஷ்யாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில் கடந்த மாதம் முதல் பேச்சுவார்த்தையையும் புறக்கணித்தது உக்ரைன். இந்தநிலையில்தான் கிழக்கு உக்ரைனை குறி வைத்து போர் வியூகத்தை மாற்றியது ரஷ்யா. அதன் பலனாக மரியுபோல் நகர் வீழ்ந்து, இரண்டாயிரம் வீரர்கள் போர்க் கைதிகளாக ரஷ்யாவிடம் பிடிபட்டுள்ளனர். மேற்குலக நாடுகள் அனுப்பிய மிகப் பெரிய ஆயுதத் தொகுப்பை ஏவுகணைத் தாக்குதல் மூலம் ரஷ்யா நேற்று அழித்துள்ளது. 

ஓரிரு நாளில் லுஹான்ஸ்க் பிராந்தியம் தங்கள் கட்டுப்பாட்டில் வரும் என்று ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி சொய்கு தெரிவித்துள்ளார். இந்தநிலையில்தான் பேச்சுவார்த்தை மட்டுமே போரை முடிவுக்கு கொண்டு வரும் என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். காலம் கடந்த அவரின் இந்த ஞானத்தை ரஷ்யா ஏற்குமா என்பது கேள்விக்குறிதான்.