உக்ரைன் போரால் ரஷ்யாவுக்கு பெரும் சிக்கல்.. உண்மையை போட்டு உடைத்தார் ரஷ்ய அமைச்சர்!!

உக்ரைன் போரால் ரஷ்யாவுக்கு பெரும் சிக்கல்.. உண்மையை போட்டு உடைத்தார் ரஷ்ய அமைச்சர்!!

உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து இருப்பதால் , ரஷ்யாவின் பொருளாதாரம், ரூபிள் மதிப்பு மற்றும் பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது.

இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள நாடுகளின் பொருளாதாரத் தடைகள், ரஷ்யாவில் கடுமையான தளவாட சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக  ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் விட்டலி சேவ்லியேவ் கூறினார்.

தெற்கு ரஷ்யாவின் அஸ்ட்ராகான் பகுதிக்கு விஜயம் செய்தபோது செய்தியாளர்களிடம் பேசிய விட்டலி சேவ்லியேவ் இதனை தெரிவித்துள்ளார்

ரஷ்ய கூட்டமைப்பு மீது விதிக்கப்பட்ட தடைகள்,  நாட்டில் உள்ள அனைத்து தளவாடங்களையும் கிட்டத்தட்ட நாசமாக்கிவிட்டதாகவும் இதன் விளைவாக புதிய தளவாட வழித்தடத்தை கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.