ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க பெலாரஸ் விரைந்தது உக்ரைன் குழு!

பெலாரசில் நடைபெறவுள்ள ரஷ்ய உயர்மட்ட அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க உக்ரைன் குழு பெலாரஸ் விரைந்துள்ளது.

ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க பெலாரஸ் விரைந்தது உக்ரைன் குழு!

நேட்டோ படையுடன் இணையும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. அதன்படி உக்ரைன் மீது வான்வழி, கடல்வழி, தரைவழி என ரஷ்யா இன்று 5-வது நாளாக தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் கைப்பற்றிய நிலையில் உக்ரைன் ராணுவம் அதனை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. 

இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும் என்ற நிலையில் ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கு தயார் என உக்ரைன் அறிவித்தது.

இதையடுத்து உக்ரைனுடனான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவு அளித்து வரும் பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்துவது என திட்டமிடப்பட்டது. ஆனால் ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைன் மீது பெலாரஸ் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்நாட்டில் நடைபெறவுள்ள பேச்சுவர்த்தையில் பங்கேற்க முடியாது என உக்ரைன் மறுப்பு தெரிவித்தது. 

இந்நிலையில், ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டதை அடுத்து  உக்ரைன் குழு பெலாரஸ் விரைந்துள்ளது.