அமெரிக்காவிற்கு நாய்களை கொண்டு வர தடை: காரணம் என்ன?

ரேபிஸ் ஆபத்து உள்ள 100 நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நாய்களை அமெரிக்கா தடை செய்கிறது.

அமெரிக்காவிற்கு நாய்களை கொண்டு வர தடை: காரணம் என்ன?

ரேபிஸ் ஆபத்து உள்ள 100 நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நாய்களை அமெரிக்கா தடை செய்கிறது.

ரேபிஸ் அதிகமாக பரவும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து நாய்களை கொண்டுவருவதற்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. ஏற்கெனவே இந்த நாடுகளில் இருந்து எடுத்துவரப்படும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழ் கட்டாயமாக கேட்கப்படுகிறது. எனினும், தடுப்பூசி போடும் அளவுக்கு வளராக சில குட்டி நாய்கள் எடுத்துவரப்படுவதால், அந்த நாய்களால் ரேபிஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பிரச்சனையை முற்றிலும் தீர்க்க, ரேபிஸ் பரவும் நாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் இந்த குட்டி நாய்களுக்கும் அமெரிக்காவுக்குள் அழைத்துவர அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், அண்மைக்காலமாக இதுபோல குட்டி நாய்கள் வருகை அதிகரித்துள்ளது. இதை அறிந்த அமெரிக்க அரசு, தடை செய்யப்பட்ட பட்டியலில் டொமினிகன் குடியரசு, பிலிப்பைன்ஸ், கொலம்பியா, கியூபா, சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து நாய்களை கொண்டு வர அனுமதி மறுத்துள்ளது.