லேட் நைட்டில் நைசாக வீட்டுக்கு வந்த மகள்... துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தந்தை

அமெரிக்காவில் திருடன் என நினைத்து 16 வயது மகளை தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் நேற்று நள்ளிரவு தனது வீட்டிற்கும் யாரோ அத்து மீறி நுழைவதாக நினைத்து பெற்ற மகளையே தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். 

இது குறித்து தாய் அவசர சேவை பிரிவு அதிகாரிகளை உதவிக்கு அழைத்த நிலையில் விரைந்து வந்த அவர்கள் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மகள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடக்கும் தனது மகளின் சடலத்தை பார்த்து தாயும், தந்தையும் கதறி அழும் காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.