அபுதாபியை டிரோன் மூலம் குறிவைத்த ஹவுதி போராளிகள்...உயிரிழந்த இந்தியர்கள்...கோழைத்தனமான தாக்குதல் என ஐநா கடும் கண்டனம்!!

அபுதாபியில் உள்ள பெட்ரோலிய உற்பத்தி ஆலைகள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அபுதாபியை டிரோன் மூலம் குறிவைத்த ஹவுதி போராளிகள்...உயிரிழந்த இந்தியர்கள்...கோழைத்தனமான  தாக்குதல் என ஐநா கடும் கண்டனம்!!

அபுதாபியில் உள்ள பெட்ரோலிய உற்பத்தி ஆலைகள், விமான நிலையம் ஆகியவற்றின் மீது  அடுத்தடுத்து 8 டிரோன்கள் கொண்டு நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஆலை ஒன்றின் மீது குண்டு விழுந்து 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் பரிதபாக உயிரிழந்ததாகவும், மேலும் 6 பேர் படுகாயமுற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த தாக்குதலுக்கு ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி போராளிகளே காரணம் என்று அபுதாபி வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இது கோழைத்தனமான தாக்குதல் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இந்த தாக்குதலை  நடத்தியது யார் என உறுதிப்பட தகவல் வெளியாகாத  நிலையில், அபுதாபியில் உள்ள இந்திய தூதரகமும் அதுபற்றிய விவரங்களை ஐக்கிய அமீரக அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறது. இதனிடையே தாக்குதலுக்கு ஹவுதி போராளிகள் பொறுப்பேற்றுள்ளனர். 

மேலும் அப்பாவி மக்கள் மற்றும் தொழில்நிறுவனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பதற்றத்தை தணிக்கவும், இதுபோன்ற தாக்குதல் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் அறிவுறுத்திய அவர், அரசியல் பேச்சுவார்த்தை மூலம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.