புகையிரதத்தில் இருந்து கிழே தவறி விழுந்த - இரு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்!!

புகையிரதத்தில் இருந்து கிழே தவறி விழுந்த - இரு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்!!

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி புறப்பட்ட புகையிரதம் ஒன்றில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சுரங்கத்து அருகில் தவறுதலாக கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவரை காப்பாற்றுவதற்காக பயணித்து கொண்டிருந்த மற்றொரு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞரும் பாய்ந்ததில் அவருக்கும் காயம் ஏற்பட்டதாக விசாரணையை மேற்கொண்ட காவல் அதிகாரிகளின் மூலம் தெரியவந்துள்ளது.

புகையிரதத்தின் கதவு பகுதியில் நின்றவாறு செல்ஃபி எடுக்க முயன்ற போது தவறுதலாக அவர் விழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. புகையிரதத்தில் இருந்து கீழே விழுந்த தம்பதிகள் காயமடைந்தது தொடர்ந்து அவர்களை அதே புகையிரகத்தில் ஹப்புத்தலைக்கு கொண்டு வரப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலையில் அனுமதித்து உள்ளனர். இது குறித்து ஹப்புத்தளை காவல் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு உள்ளனர்.