போதைபொருள் கடத்துவதில் இரு கும்பல்கள் மோதல்: அப்பாவி பொதுமக்களை நடுரோட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்யும் கொடுமை...

கொலம்பியாவில் போதைபொருள் கடத்தல் கும்பலுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 23 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதைபொருள் கடத்துவதில் இரு கும்பல்கள் மோதல்: அப்பாவி பொதுமக்களை நடுரோட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்யும் கொடுமை...

தென் அமெரிக்காவைச் சேர்ந்த கொலம்பியாவின் அரகா மாநிலத்தில் போதை பொருள் கடத்தல் தொடர்பாக இரு குழுக்களுக்கு இடையே ஒருவாரமாக சண்டை நீடித்து வருகிறது. இந்த நிலையில் 
கொலம்பியாவின் அரகா மாகாணத்தில் இருந்து அண்டை நாடான வெனிசுலாவிற்கு போதை பொருள் கடத்தப்படுகிறது.

இதில் கடத்தல் நடக்கும் பகுதியின் அதிகாரம் தொடர்பாக இ.எல்.என்., மற்றும் பார்க் ஆகிய இரு கும்பல்களுக்கு இடையே சண்டை வெகு நாட்களாக நடைபெற்று வருகிறது. இரு தரப்பினரும், தங்களை காட்டிக் கொடுப்பதாக சந்தேகிக்கும் அப்பாவி மக்களை வீடுகளில் இருந்து வெளியே இழுத்து வந்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றனர். 

கடந்த ஒரு வாரத்தில், இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50 பேர் வரை காணவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே மோதல் நடக்கும் பகுதிக்கு ராணுவம் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.