ட்விட்டரின் புதிய CEO.... வித்தியாசமான அற்புதமான CEOவை நியமித்த எலான் மஸ்க்....

ட்விட்டரின் புதிய CEO.... வித்தியாசமான அற்புதமான CEOவை நியமித்த எலான் மஸ்க்....

எலோன் மஸ்க் ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியின் படத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  இந்த 'புதிய தலைமை நிர்வாக அதிகாரி' ஆன்லைனில் வைரலாகி வருவதோடு மக்கள் எதிர்பார்க்கும் ஒருவராக அவர் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்றவரை விட சிறந்தவர்:

பில்லியனரான எலோன் மஸ்க் ட்விட்டரின்  'புதிய CEO'  படத்தைப் பகிர்ந்துகொண்டு, 'அவர் மற்றவரை விட மிகவும் சிறந்தவர்' எனப் பதிவிட்டுள்ளார்.   இதில் சுவாரஸ்யம் என்னவெனில் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஒரு மனிதர் அல்ல.  அது எலான் மஸ்க்கின் செல்லப்பிராணியான ஷிபா இனு என்னும் நாய்.  மேலும் இதில் மற்றவர் என குறிப்பிடப்பட்டுள்ளவர் முன்னாள்  தலைமை நிர்வாக அதிகாரியான அகர்வால் எனப் பேசப்படுகிறது.

அற்புதமானவர்:

மற்றொரு புகைப்படத்தில் மஸ்க் அவரது நாய் ஷிபா இனு, CEO நாற்காலியில்  சிஇஓ-தீம் கொண்ட கருப்பு டி-ஷர்ட்டை அணிந்து அதற்கு முன் சிறிய மடிக்கணினி மற்றும் சில காகிதங்கள் வைத்த மாதிரியான படத்தை பகிர்ந்து அதில், "ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி அற்புதமானவர்" என்று மஸ்க் பதிவிட்டுள்ளார்.

எண்களில் சிறந்தவர்:

மற்றொரு ட்வீட்டில், புதிய தலைமை நிர்வாக அதிகாரியின் திறமையை மஸ்க் உணர்த்தும் விதமாக "அவர் எண்களில் சிறந்தவர்!" என பதிவிட்டுள்ளார்.  அந்த புகைப்படத்தில் அது வணிக உடை மற்றும் கண்ணாடி அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  கள்ளக்காதலால்..... மதுவில் பங்கு கேட்டு இறப்பிலும் இணைப்பிரியாத நண்பர்கள்!!