மேடையிலேயே முடியை வெட்டிய துருக்கி நாட்டின் பிரபல பாடகி .. என்ன காரணம்?

ஈரானில் முறையாக ஹிஜாப் அணியாததால் இளம் பெண் கொலை செய்யப்பட்டார்..!

மேடையிலேயே முடியை வெட்டிய துருக்கி நாட்டின் பிரபல பாடகி .. என்ன காரணம்?

இளம் பெண் கொலை:

துருக்கி நாட்டை சேர்ந்த பாடகி ஒருவர் தனது தலைமுடியை வெட்டி ஹிஜாபுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஈரானில் முறையாக ஹிஜாப் அணியாததால் நெறிமுறை பாதுகாவலர்களால் தாக்கப்பட்ட இளம் பெண் உயிரிழந்தார். 

உலகம் முழுவதும் ஆதரவு:

இந்த சம்பவத்தை கண்டித்து ஈரானிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

தலைமுடியை வெட்டிய பிரபல பாடகி:

இதன் ஒரு பகுதியாக துருக்கியை சேர்ந்த பிரபல பாடகி மெலெக் மோசோ என்பவர் நேரலை நிகழ்ச்சியில் ரசிகர்கள் முன்னிலையில் தனது தலை முடியை வெட்டி ஈரான் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.