சுரங்க பாதை இடிந்து விழுந்து விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 1 லட்சம் நிதியுதவி!

ஜம்மு-காஷ்மீரில் ராம்பன் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய 10 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. 

சுரங்க பாதை இடிந்து விழுந்து விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 1 லட்சம் நிதியுதவி!

ராம்பன் மாவட்டத்துக்கு உட்பட்ட கூனி நல்லா பகுதிக்கு அருகே புதிதாக சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி இரவு இந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இதில் பணியில் இருந்த 13 தொழிலாளர்கள்  இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். அதில், 3 பேர் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய தொழிலாளர்களை மீட்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று 10 தொழிலாளிகளின் உடல்களும் மீட்கப்பட்டன. இதனையடுத்து மீட்பு பணிகளும் நிறைவடைந்தன.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கட்டுமானப் பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனம், தலா 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.