கடலில் வெடித்து வரும் எரிமலை..பசுபிக் நாடான டோங்காவிற்கு சுனாமி எச்சரிக்கை!!

நீருக்கு அடியில் எரிமலை வெடிக்கத் தொடங்கியதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலில் வெடித்து வரும் எரிமலை..பசுபிக் நாடான டோங்காவிற்கு சுனாமி எச்சரிக்கை!!

ஹங்கா-டோங்கா ஹாப்பாய் தீவில் எரிமலை வெடித்து வருவதால் கடல் சீற்றத்தோடு காணப்படுகிறது.

நீருக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்து சிதறி வருவதால் டோங்கா தீவு பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.இந்த எரிமலையானது முதலில் வெள்ளிக்கிழமை அன்று வெடித்து சிதற தொடங்கியதாக சொல்கின்றனர்.எரிமலை வெடித்ததால் காற்றில் அதன் சாம்பல்கள் பரவி வந்ததாக கூறப்படுகிறது.இதனிடையில் உள்ளூர் நேரத்தின் கணக்கின் படி சனிக்கிழமை மாலை 5.26 மணியளவில் இரண்டாவது வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இதனை பற்றிய கூடுதல் விவரங்களாக ஆய்வாளர்கள் கூறுகையில் செயற்கைக்கோள் பட்டமானது பெரிய அளவிலான சாம்பல் மேகமும் அதனுடன் வெடிப்பிலிருந்து உருவாகி வரும் அதிர்ச்சிக்குரிய அலைகளையும் காட்டுவதாக கூறுகின்றனர்.இந்த எரிமலை வெடிப்பின் அலைகளானது டோங்காவின் தலைநகரான நுகுஅலோபாவின் கரையோரத்தை கடந்து சென்று சாலையோர சொத்துக்களை மூழ்க அடித்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் நிலங்கள் மற்றும் கடலோர எல்லைகள் என அனைத்தும் கடல் நீரில் மூழ்கவும்,திடீர் வெள்ளத்தால் பாதிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளிட்யிட்டதாக கூறப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் உள்ள அதிகாரப்பூர்வமான வானிலை ஆய்வு சேவையானது நாடு முழுவதும் உள்ள அதன் வானிலை மையங்கள் என அனைத்தும் சனிக்கிழமை மாலை வெடிப்பிலிருந்து அழுத்தம் அதிகரிப்பதனை கண்காணித்து வருவதாக கூறியுள்ளது.மேலும் அந்த நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது சிறு பரப்பரப்பை ஏற்படுத்தியதாக சொல்கின்றனர்.