பிரான்சில் சுற்றுலா விமானம் விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி...!

பிரான்சில் சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.

பிரான்சில் சுற்றுலா விமானம் விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி...!

தென்கிழக்கு பிரான்சில் உள்ள கிரெனோபில் அருகே உள்ள வெர்சௌட் விமானநிலையத்தில் இருந்து சுற்றுலா விமானம் ஒன்று 5 பேருடன் புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சுமார் 60 தீயணைப்பு வீரர்கள் விரைவாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.