இங்கிலாந்தில் அரசியல் நெருக்கடியை சமாளிக்க - அமைச்சர்களை மாற்றியமைக்கும் போரிஸ் ஜான்சன்..!

இங்கிலாந்தில் அரசியல் நெருக்கடியை சமாளிக்க - அமைச்சர்களை மாற்றியமைக்கும் போரிஸ் ஜான்சன்..!

இங்கிலாந்தில் இரு அமைச்சர்கள் பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடனடியாக அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார்.

ஜான்சன் நாட்டை நல்லமுறையில் வழிநடத்துவார் என்ற நம்பிக்கை இல்லை என்று கூறி நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஷாஜித் ஜாவேத் ஆகியோர் பதவி விலகினர்.

ஏற்கனவே கொரோனா ஊரடங்கு விதிமுறையை மீறிய குற்றச்சாட்டில் சிக்கித் தவித்த பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்த ராஜினாமாக்கள் அரசியல் நெருக்கடியை அதிகரித்தன. இதனை சமாளிக்கும் விதமாக  கல்வித்துறை அமைச்சராக இருந்த நாதிம் ஜஹாவி புதிய நிதி அமைச்சராகவும் பிரதமர் அலுவலக தலைமை நிர்வாகியாக இருந்த ஸ்டீவ் பார்க்லேவசாவை சுகாதாரத்துறை அமைச்சராகவும் போரிஸ் ஜான்சன் நியமித்து வேகம் காட்டியுள்ளார்.