முதன்முறையாக விண்வெளியில் டிக்டாக்.. இணையத்தை கலக்கி வரும் வீடியோ.. இதோ!!

பூமியை தாண்டி முதன்முறையாக விண்வெளியில் எடுக்கப்பட்ட டிக்டாக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதன்முறையாக விண்வெளியில் டிக்டாக்.. இணையத்தை கலக்கி வரும் வீடியோ.. இதோ!!

பூமியைத் தாண்டி முதல்முறையாக சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் வீராங்கனை ஒருவர் செய்த டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இத்தாலியைச் சேர்ந்த விண்வெளி வீரரான சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி கடந்த ஏப்ரல் 27ம் தேதி புவி சுற்றுப்பாதையில் உள்ள ஐரோப்பிய விண்வெளி நிலையத்தில் தொடங்கி 6 மாதங்கள் தங்குவதற்காக அங்கு சென்றார். இந்நிலையில் தன் விண்வெளி அனுபவத்தை விளக்கியவாறு சமீபத்தில் அவர் பகிர்ந்த டிக்டாக் வீடியோ தற்போது பேசு பொருளாகியுள்ளது.

Back on the International @Space_Station (and TikTok) pic. twitter.com/oCgJSdWKcu

— Samantha Cristoforetti (@AstroSamantha) May 6, 2022