11 வயதான பள்ளி சிறுவனுக்கு  மூன்று வகையான கொரோனா தொற்று உறுதி...அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

பள்ளி சிறுவனுக்கு மூன்று வகையான ஆல்பா, டெல்டா ஒமிக்ரான் எனகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11 வயதான பள்ளி சிறுவனுக்கு  மூன்று வகையான கொரோனா தொற்று உறுதி...அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

இஸ்ரேலில் 11 வயதான சிறுவனுக்கு ஆல்பா மற்று, டெல்டா, ஒமைக்ரான் ஆகிய மூன்று தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து சிறுவனை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.  இஸ்ரேலில் உள்ள கெஃபர் சபாவில் வசிக்கும் அலேன் ஹெல்ஃப்காட் என்ற 11 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் தொற்று மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் பரிசோதனையில் முடிவில் அந்த சிறுவனுக்கு உருமாறிய வைரஸ் தொற்றுகளான ஆல்பா, டெல்டா மற்றும் ஒமிக்ரான் ஆகிய மூன்றும் பாதித்துள்ளது தெரியவந்ததாக சொல்கின்றனர்.

மேலும்  இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் கொரோனா பாதித்த சிரறுவனுக்கு இது மூன்றாவது முறையாக எடுக்கப்பட்ட பரிசோதனை என்பது குறிப்பிடத்தக்கது என கூறியுள்ளனர். மேலும் தற்போது அந்த சிறுவன் நலமாக இருந்து வருவதாக சொல்கின்றனர். இந்த சிறுவனுக்கு பள்ளியில் தொற்று பரவியிருக்கும் எனவும் பரவலின் வழித்தடம் குறித்து ஆய்வு செய்த போது சிறுவனின் வகுப்பில் உள்ள சக மாணவர்களுக்கு 10 பேருக்கு தொற்று இருந்ததும் தெரிய வந்தது.  இந்த சிறுவனை  மருத்துவ தரப்பினர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.