நேட்டோ உச்சி மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து - போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மக்கள்!!

நேட்டோ உச்சி மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து - போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மக்கள்!!

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நாளை தொடங்க உள்ள நேட்டோ உச்சி மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாட்ரிட் நகரில் பேரணியாகச் சென்ற எதிர்ப்பாளர்கள், நேட்டோ மற்றும் போருக்கு எதிராகவும், அமைதிக்கு ஆதரவாகவும் முழக்கமிட்டனர். ரஷ்யா- உக்ரைன் இடையிலான மோதல்களுக்கு அமெரிக்காவும் நேட்டோவும் மிகப் பெரிய பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் நேட்டோவின் இருப்பு, உலக அமைதிக்கு கடுமையான அச்சுறுத்தல் என்றும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

நேட்டோ ஒரு கிரிமினல் அமைப்பு என்றும் உலகின் பெரும்பாலான பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்துடன் போர்களைத் தூண்டுவதைத் தவிர அமெரிக்கா வேறு எந்த நல்ல விஷயத்தையும் செய்வதில்லை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.